தமிழ்நாடு

tamil nadu

'96' படம் எனக்கு அலாதியான அனுபவம் - விஜய் சேதுபதி

By

Published : Sep 21, 2021, 7:43 PM IST

'96' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆவது குறித்து விஜய் சேதுபதி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

vijaysethupathi
vijaysethupathi

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான '96' தமிழ்த்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் சி. பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் 90-களில் பள்ளிகளில் நடந்த காதல் பற்றியும், பின்னாளில் பிரிந்த காதலர்கள், முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கலந்துகொண்டது குறித்தும் அழகாக விவரிக்கப்பட்டிருக்கும். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தை மேலும் பிரபலமடையச் செய்தன.

தமிழ் மொழியில் மட்டுமே வெளியான இத்திரைப்படம் தெலுங்கு, கன்னட சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இதைத் தொடர்ந்து கன்னடத்தில் '99' என்ற பெயரில் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. கன்னட நடிகர் கணேஷ், மற்றும் பாவனா நடித்திருந்த இப்படத்தை பீரித்தம் கப்பி இயக்கியிருந்தார்.

தெலுங்கில், '96' பட இயக்குநர் பிரேம் குமாரே நடிகர் சர்வானந்த், நடிகை சமந்தாவை வைத்து இயக்கினார். தற்போது இந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

'96' படத்தின் இந்தி ரீமேக் உரிமையை அஜய் கபூர் கைப்பற்றியுள்ளார். இருப்பினும், இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்தான எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியாகவில்லை. தற்போது இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகத் தெரிகின்றது.

இந்நிலையில் '96' படம் இந்தியில் ரீமேக் ஆவது குறித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டரில், "ஒரு நடிகராக ரசிகர்களின் ரசனைக்கு ஒத்துப்போகும் கதைகளைச் சொல்வதில் எனக்கு அதீத சந்தோஷம் கிடைக்கும்.

அந்தக் கதை அதிக ரசிகர்களைச் சென்றடையும்போது என் மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது.

'96' படம் எனக்கு அலாதியான அனுபவமாக இருந்தது. இப்போது தயாரிப்பாளர் அஜய் கபூர், அந்தப் பயணத்தை இந்தி ரீமேக்கில் தொடரவிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். படத்தை பார்க்க காத்திருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லவ் குருவில் ‘96’ ஒலிச்சித்திரத்துக்கு தடை - பின்னணியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details