தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 20, 2021, 10:53 PM IST

ETV Bharat / sitara

அப்போ அறக்கட்டளை; இப்போ தியேட்டர் - புதிய பரிமாணத்தில் விஜய் தேவரகொண்டா

தெலுங்கு இளம் நடிகரான விஜய் தேவரகொண்டா புதிதாக மல்டிபிளெக்ஸ் திரையரங்கை திறந்து வைத்திருக்கிறார்.

AVD
AVD

'அர்ஜுன் ரெட்டி' என்ற ஒரே படத்தின் மூலம், தெலுங்கு ரசிகர்களையும் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டவர், விஜய் தேவரகொண்டா. குறிப்பாக, இவருக்கு ரசிகைகள் பட்டாளமே அதிகமாக இருக்கிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்குப் பெண் ரசிகர்கள் ஏராளம். இவரது புகைப்படங்களைப் பார்ப்பதற்கு என்றே ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா சொந்தமாக புதிய மல்டிபிளெக்ஸ் திரையரங்கை செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கவுள்ளார். 'ஏசியன் விஜய் தேவரகொண்டா சினிமாஸ்' (எவிடி) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரையரங்குகள், விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது பெற்றோரின் சொந்த ஊரான தெலங்கானா மாநிலத்தில் உள்ள மெகபூப்நகரில் திறக்கப்படவுள்ளது.

இதுகுறித்து விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு இனிமையான மகிழ்ச்சியான முக்கியமான செய்தி ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த வீடியோ.

பல நாட்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு நடிகரானேன். அப்படி கனவு கண்டது நேற்று நடந்தது போல் இருக்கிறது. என்னுடைய முதல் மல்டிபிளெக்ஸ் திரையரங்கு திறப்பு பற்றி உங்களிடம் இன்று பகிர்கிறேன். ஏவிடி - ஏசியன் விஜய் தேவரகொண்டா சினிமாஸ். எனது அப்பா, அம்மா சொந்த ஊரான மெகபூப் நகரில் திறக்கிறேன்.

மெகபூப் நகரின் மக்கள், நண்பர்கள், தங்களின் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிட, வெளியில் செல்ல, விசேஷ நாள்கள், விடுமுறை நாள்களை சிறப்பானதாக மாற்ற வரவேற்கிறேன்.

ஒரு உலகத்தரம் வாய்ந்த வசதியான, ஆடம்பரமான திரையரங்கு அனுபவத்தைத் தருவதே எங்களது லட்சியம். செப்டம்பர் 24ஆம் தேதி 'லவ் ஸ்டோரி' படத்தின் மூலம் திரையிடலை ஆரம்பிக்கிறோம். சேகர் கம்முலா இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி இப்படத்தில் நடித்துள்ளனர்.

எனது சினிமா வாழ்க்கை சேகர் கம்முலாவிடமிருந்து தான் ஆரம்பமானது. அவரது படத்தை முதல் படமாக திரையிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 'லவ் ஸ்டோரி' குழுவிற்கு வாழ்த்துகள்.

எனது வாழ்க்கையில் திரையரங்குகளைத் திறப்பது மகிழ்ச்சி. ஆனால், அன்றைய தினம் கோவாவில் பெரும் பட்ஜெட் படமான லிகர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். அதனால் என்னால் அன்றைய தினம் வர இயலாது.

என்னால் தற்போது பல வேலைகளை செய்ய முடிகிறது. அறக்கட்டளை, திரையரங்கு என தொடர்ந்து இயங்கி வருகிறேன். திரையரங்கு திறப்புக்கு வாருங்கள். அனைவருக்கும் நன்றி" என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இன்ஸ்டாவில் 13 மில்லியன் ஃபாலோயர்கள் - விஜய் தேவரகொண்டா புதிய சாதனை

ABOUT THE AUTHOR

...view details