தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 18, 2020, 4:45 PM IST

ETV Bharat / sitara

தென்னிந்திய நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் 'ரவுடி பாய்'

சென்னை: தென்னிந்திய நடிகர்களில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பாலோவர்களைப் பெற்றுள்ள ஒரே நடிகர் என்ற சாதனையை விஜய் தேவரகொண்டா படைத்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார் விஜய் தேவர கொண்டா. தனக்கென ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகச் செயல்படக்கூடியவர்.


இன்ஸ்டாகிராமில் இவருக்குப் பெண் ரசிகர்கள் ஏராளம். இவரது புகைப்படங்களைப் பார்ப்பதற்கு என்றே ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். தற்போது, இவர், தென்னிந்திய நடிகர்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பாலோவர்களைப் பெற்றுள்ள ஒரே நடிகர் இவர்தான்.

விஜய் தேவரகொண்டா

பல முன்னணி நடிகர்களை பின்னுக்குத்தள்ளி, சுமார் 8 மில்லியன் (80 லட்சம்) பாலோவர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடம் என, எந்த மொழி முன்னணி நடிகர்களும் இவ்வளவு ஃபாலோவர்களை இதுவரைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details