நட்சத்திர நடிகர்கள் தங்களின் புதுப்பட அறிவிப்புகள், வெளியீட்டுத் தேதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ட்விட்டர் மூலமே அதிகம் வெளியிடுகின்றனர். ரசிகர்கள் ஹேஷ்டேக்கில் தங்களது கருத்துகளைப் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக், நடிகர் பெயர் உள்ளிட்டவற்றின் பட்டியலை ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுவருகிறது.
டாப் 5 தென்னிந்திய திரைப்படங்கள் இந்நிலையில் இன்று (டிசம்பர் 9) ட்விட்டர் இந்தியா நிறுவனம் அதிக ஹேஷ்டேக்குகள் பகிரப்பட்ட தென்னிந்திய திரைப்படங்களின் டாப் 5 பட்டியலை வெளியிட்டது.
இந்திய அளவிலான டாப் 10 ஹேஷ்டேக் அதில் விஜய்யின் மாஸ்டர், பீஸ்ட் ஆகிய இரண்டு திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அஜித்தின் வலிமை, சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படங்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து 2021ஆம் ஆண்டின் இந்திய அளவிலான அதிகம் பகிரப்பட்ட ட்விட்டர் நிறுவனத்தின் டாப் 10 பட்டியலில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் எட்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
விஜய்யின் ட்விட்டர் பதிவு அதுமட்டுமல்லாமல் விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே அதிக லைக்குகள், அதிக ரீ-ட்வீட் செய்யப்பட்ட போஸ்டர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் நடிகர் விஜய் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: சமந்தாவின் 'தி பேமிலி மேன் 2' வெப் சீரிஸ் சாதனை!