ஊரடங்கு உத்தரவால் தமிழ்நாட்டில் இருந்த பிற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை(ஜூலை 9) சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2,000 பேர், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்களுக்கு நடிகை வரலட்சுமி, தனது சேவ் சக்தி (Save Shakti) அறக்கட்டளை சார்பாக அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளார்.