தமிழில் நடிகர் பிரகாஷ் ராஜ் தயாரித்து இயக்கிய படம் 'தோனி'. இப்படம் 2012ஆம் ஆண்டு வெளியானது. மகனை உயர்கல்வி வரை படிக்க வைத்து விட வேண்டும் என்ற விருப்பம் கொண்ட தந்தை. கிரிக்கெட் வீரர் தோனி போன்று கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்ட மகன் என முரண்பட்ட விருப்பங்களைக் கொண்ட தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான கதையம்சத்தைக் கொண்ட இப்படம் தமிழில் நல்ல வரேற்பைப் பெற்றிருந்தது.
இப்படத்தில் பிரகாஷூக்கு மகனாக நடித்த ஆகாஷ் பூரி தற்போது தெலுங்கில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இயக்குநர் அணில் படூரி இயக்கும் இப்படத்திற்கு 'ரொமாண்டிக்' (Romantic) என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் ஆகாஷூக்கு ஜோடியாக கீத்திகா ஷர்மா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சார்மி கவூர் நடிக்கிறார். இப்படத்தை பூரி ஜெகநாத் தயாரிக்கிறார்.