கரோனா வைரஸ் காரணமாக அடுத்த மாதம் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர்.
கடிகாரம் போல் தொடர்ந்து சுற்றித் திரிந்த அவர்கள், வீட்டில் முடங்கியுள்ளதால் தங்களது பழைய புகைப்படங்களை வெளியிட்டு, அந்த புகைப்படத்தை பற்றி விரிவாக பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை டாப்சி, தான் முதல்முறையாக நியூயார்க் சென்ற அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “இந்தப் புகைப்படம் நான் முதல்முறையாக நியூயார்க் சென்றபோது எடுத்த புகைப்படம். தவறுதலாக குளிர்காலத்தில் சென்றுவிட்டேன்.
முதல்முறையாக மைனஸ் டிகிரி வெப்பநிலையை அனுபவித்தேன்! இரவு உணவு சாப்பிடுவதற்காக, ஒரு உணவகத்திற்கு நடந்தே சென்றோம். அப்போது அடித்த குளிர் காற்றால் எனது உடல் நடுங்கியது. அப்போதுதான் தெரிந்தது இந்த குளிர்காலம் நிச்சயமாக எனக்கு பொருந்தாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மூன்றே வார்த்தையில் விஜய் பற்றி கூறிய ஹன்சிகா