விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை தற்போது திரைப்படமாக இயக்குவது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிதாக கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் உருவாகிறது.
’சபாஷ் மீது’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் மிதாலி ராஜாக நடிகை டாப்ஸி நடிக்கிறார். இந்தி மொழியில் இப்படம் உருவாகிறது. ராகுல் தோலக்கியா இயக்கும் இப்படத்தை, வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தொடர்ந்து இப்படத்திற்காக பயிற்சி எடுக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் டாப்ஸி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சபாஷ் மீது படப்பிடிப்பு இன்று (ஏப்.5) முதல் தொடங்கியுள்ளதாக டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், “வாங்கப் போகலாம்.. நாள் 1” என்று குறிப்பிட்டுள்ளார். இதுதவிர டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள, ’ராஷ்மி ராக்கெட்’ திரைப்படம் ரிலிஸூக்கு தயாராக உள்ளது.
இதையும் படிங்க:தேசிய விருது பெற்ற நடிகருக்கு கரோனா தொற்று!