தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவிற்கு திருமணம் நடைபெறவுள்ளதாக அடிக்கடி வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
சிம்புவின் திருமணம் குறித்து டி. ராஜேந்தரின் திடீர் அறிக்கை! - T Rajendharar statement
நடிகர் சிலம்பரசனின் திருமண வதந்திகள் சமூக வளைதளங்களில் பரவியதை தொடர்ந்து அவரது தந்தை டி. ராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

குறிப்பாக இன்று பிரபல தொழிலதிபர் மகளுடன் சிம்புவுக்கு திருமணம் என்ற தகவல் வெளியானதால், சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. இந்நிலையில், இத்தகவல் முற்றிலும் தவறானது என சிம்புவின் தந்தை டிஆர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மைத்தன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிகை வாயிலாக உங்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.