லண்டன்: கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நடிகர் ஆண்ட்ரூ ஜாக், இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஹாலிவுட் பட நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பவரும், ஸ்டார் வார்ஸ் பட நடிகருமான ஆண்ட்ரூ ஜாக் (76), கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மருத்துவமனையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த இவர், இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் செய்தியை அவரது மனைவி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “ஆண்ட்ரூவை நாம் இழந்துவிட்டோம். இரண்டு நாள்களுக்கு முன்பு அவருக்கு கரோனா தொற்றுநோய் இருப்பது தெரியவந்தது. எந்த ஒரு வலியும் இல்லாமல் அவர் சென்றுவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஆஸ்கார் விருது நடிகர் ராபர்ட் டவுனி, ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் பியர்ஸ் ப்ரோஸ்னன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நடிகர்களுக்கு நடிப்பு கற்றுக்கொடுத்துள்ளார். இதையடுத்து ஆண்ட்ரூ, ஸ்டார் வார்ஸ் சீரிஸ்களில் 'Caluan Ematt' என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த நகைச்சுவை நடிகர் உயிரிழப்பு!