பிரபல பாடகர் எஸ்பிபி ஆகஸ்ட் 5ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு உடல்நிலை ஒத்துழைத்த நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது. எஸ்பிபி உடல்நிலை சரியாக தமிழ் திரையுலகினர் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.
இதனையடுத்து, வென்டிலேட்டர் மற்றும் எக்ஸ்மோ கருவிகள் மூலம் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சகஜ நிலைக்கு திரும்பி வருகிறார் என மருத்துவமனை நிர்வாகமும், அவரது மகன் எஸ்பிபி சரணும் அவ்வப்போது வீடியோ மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, செப்டம்பர் 10ஆம் தேதியன்று அப்பா கரோனா தொற்றிலிருந்து மீண்டார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. நுரையீரல், சுவாச பிரச்னை மற்ற உடல் பகுதியும் நலமாக உள்ளன. எக்மோ கருவிகள் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக சரண் தெரிவித்தார்.
இந்நிலையில், சரண் புதிதாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "அப்பாவால் நிமிர்ந்து உட்கார முடிகிறது. 15-20 நிமிடங்கள் உட்கார்ந்து உணவு சாப்பிடுகிறார். உங்களது பிரார்த்தனையும், அன்பும்தான் அவரது உடல்நிலை தேறி வர காரணமாக உள்ளது. எம்ஜிஎம் ஹெல்த்கேரில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர் அவரை நல்லமுறையில் பார்த்து எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'அந்தாதுன்' தெலுங்கு ரீமேக்கில் நடிகை தமன்னா