நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'கோலமாவு கோகிலா' பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன், கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் வினய், நடிகை பிரியங்கா மோகன், யோகி பாபு, அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மார்ச் 26ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
இப்படத்திலிருந்து, அனிருத் - ஜோனிடா காந்தி குரலில் வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் 'செல்லம்மா' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்பாடலை சிவகார்த்திகேயனே எழுதியுள்ளார்.
இப்பாடல் இதுவரை யூ-ட்யூபில் 100 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். யூ-ட்யூபில் 2020ஆம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட 20 தமிழ்ப் பாடல்களில் 'செல்லம்மா' இருபதாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் 'ரெளடி பேபி' பாடல் இருக்கிறது.
யூ-ட்யூபில் சாதனைபுரிந்த தமிழ்ப் பாடல்கள்
இதையும் படிங்க: யூ-டியூப்பில் சாதனை படைக்கும் சிவகார்த்திகேயனின் செல்லம்மா பாடல்!