'90ஸ்’ கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான கார்ட்டூன் நிகழ்ச்சி என்றால் கண்டிப்பாக அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் ஒன்று 'ஸ்கூபி டூ'. நம்மில் பலரும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து கண்டிப்பாக வளர்ந்து இருப்போம். இதையடுத்து 'ஸ்கூபி டூ’ அனிமேஷன் படமாக 2002ஆம் வெளியானது.
இந்த நிலையில் தற்போது 16 ஆண்டுகள் கழித்து 'ஸ்கூபி டூ' படம் தயாராகியுள்ளது. 'ஸ்கூப்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் ஷஃகி, ஸ்கூப் செய்யும் அட்டகாசங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.