தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 2, 2021, 4:27 PM IST

ETV Bharat / sitara

கலர் ஃபுல்லாக மாறிய சந்தானத்தின் சபாபதி

‘சபாபதி’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை, கலர்ஸ் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

சபாபதி
சபாபதி

'டிக்கிலோனா' படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சபாபதி’. நகைச்சுவை கலந்து குடும்ப சென்டிமென்ட்டாக உருவாகியுள்ள இப்படத்தை ஆர். ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார்.

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் படத்தைத் தயாரித்துள்ளது. எம்.எஸ். பாஸ்கர், பிரீதி வர்மா, சாயாஜி ஷிண்டே, புகழ், சுவாமிநாதன், மாறன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்த நிலையில், திரையரங்குகளில் நவம்பர் மாதம் படம் வெளியாகிறது.

சபாபதி

இந்நிலையில் இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் படங்களுக்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பைக் கருத்தில்கொண்டு மிகப்பெரிய விலை கொடுத்து, தொலைக்காட்சி உரிமையை கலர்ஸ் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திக்குவாயால் அவதிப்படும் இளைஞர் கதாபாத்திரத்தில் முதல்முறையாக இப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார். தந்தை, மகனுக்கிடையேயான உறவு குறித்து அழகாகக் காட்டப்பட்டுள்ளதாகப் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். சந்தானத்தின் இந்தப் படத்தைக் காண அவரது ரசிகர்கள், ஆர்வமாக உள்ளனர்.

இதையும் படிங்க:சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்

ABOUT THE AUTHOR

...view details