தமிழ் சினிமாவில் 'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. சூர்யா, அஜித், விஷால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த சமீரா ரெட்டி, திடீரென திருமணம் செய்துக் கொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். ஆனால், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமீரா ரெட்டி, நீச்சல் குளத்தில் எடுத்த பல புகைப்படங்கள் வைரலானது. பின் சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், குழந்தை பிறந்த இரண்டே மாதத்தில் தனது குழந்தையுடன் கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான முல்லயநாகிரிக்கு சென்றுள்ளார்.