நாடு முழுவதும் கரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
இருப்பினும் தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவும் குழப்பத்தால், பலரும் அதை எடுத்துக்கொள்ள மறுக்கின்றனர்.
இந்நிலையில் தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில் திரையுலகினர் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.
அதன்படி நடிகை ரித்விகா இன்று(மே.26) கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில், "நான் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். அனைவரும் தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.