'கேஜிஎஃப்' இரண்டாம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாகும் தேதி
பெங்களூரு: 'கேஜிஎஃப்' இரண்டாம் பாகத்தில் ரவீணா டாண்டனின் கதாபாத்திரம் குறித்தான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப்
தமிழில் அர்ஜுன் ஜோடியாக 'சாது' படத்திலும், கமல்ஹாசன் ஜோடியாக 'ஆளவந்தான்' படத்திலும் நடித்தவர் ரவீணா டாண்டன்.
தற்போது இவர் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'கேஜிஎஃப்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துவருகிறார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் ரவீணா, 'கேஜிஎஃப்' படக்குழுவினர் அவரது கதாபாத்திரம் குறித்தான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.