உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதால், அனைத்து மொழி திரைப்படப் படப்பிடிப்புகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலிருக்கும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாகச் செயல்பட்டுவருகின்றனர்.
அந்த வகையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது மனைவி தீபிகா படுகோனுடன் உடற்பயிற்சி செய்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த தீபிகா, 'என்னுடய ஸ்நாக்ஸ்' என்று கருத்திட்டுள்ளார். பலரும் அதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அதற்குப் பதிலளித்த ரன்வீர், தன்னுடைய மூக்கு பக்கோடா போன்று இருப்பதால், தீபிகா அப்படி கருத்திட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதை மீறி இவர்கள் இருவரும் ஒன்றாக போஸ் கொடுத்து வெளியிட்டதற்கு இணையவாசிகள் கடுமையாகச் சாடிவருகின்றனர்.
இதையும் படிங்க:வின் டீசலை படம் இயக்க அழைக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்