தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியணும்; கந்தனுக்கு அரோகரா' - ரஜினி ட்வீட்

கந்த சஷ்டி கவசத்தை கேவலமாக அவதூறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த அரசுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழிய வேண்டும் என்று ரஜினிகாந்த் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Rajinikanth in Padayappa movie
படையப்பா படத்தில் ரஜினிகாந்த்

By

Published : Jul 22, 2020, 12:43 PM IST

சென்னை: கந்த சஷ்டி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

கந்த சஷ்டி கவசத்தை மிகக்கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழ்நாடு அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்; ஒழியணும்.

எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கந்த சஷ்டி விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் ட்விட் பதிவு

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வீடியோவை வெளியிட்டு கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அனைத்து காவலர்களையும் தரக்குறைவாக எண்ணவேண்டாம் - ஆய்வாளர் ரஜினி!

ABOUT THE AUTHOR

...view details