40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் ரஜினிகாந்த் எண்ணற்ற விருதுகளை வாங்கியுள்ளார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்த ரஜினி இன்று இந்திய சினிமாவில் மிகப் பெரிய உயரத்தை எட்டியுள்ளார்.
80களின் காலகட்டத்தில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை அவர் நடித்த படங்களின் மூலம் ஏற்படுத்தினார் ரஜினி . மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக இருந்தார், இருக்கிறார். நடிகராக மட்டும் அல்லாது குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். 80 களின் இறுதியிலேயே கோடியைத் தொட்டு சம்பளம் வாங்கியவர் என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு சொல்லவா வேண்டும். இவரின் நடிப்பு, படங்களுக்காக ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். தமிழ்நாடு அரசின் விருது முதல் இந்திய அரசால் வழங்கப்படும் விருது வரை அனைத்தையும் பெற்றுள்ளார்.
ரஜினி பெற்ற விருதுகள்
1978 ஆம் ஆண்டு முதல்முறையாக முள்ளும் மலரும் படத்தின் காளி கதாபாத்திரத்திற்காக தமிழ்நாடு அரசின் விருது பெற்றார். 1982 ஆம் ஆண்டு மூன்று முகம், 1984 ஆம் ஆண்டில் நல்லவனுக்கு நல்லவன், 1994 ஆம் ஆண்டு முத்து, 1999 ஆம் ஆண்டு படையப்பா, 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி, 2007ஆம் ஆண்டு சிவாஜி ஆகிய படங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார்.