தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பார்த்திபனுக்கு சூப்பர் ஸ்டாரின் ஆஸ்கர் பாராட்டு!

பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' படம் ஆஸ்கார் விருதை பெற வேண்டும் என்று, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

By

Published : May 19, 2019, 10:52 PM IST

Updated : May 19, 2019, 11:35 PM IST

ஒத்த செருப்பு சைஸ் 7

'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்திற்கு பிறகு நடிகர் பார்த்திபன் இயக்கி நடிக்கும் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. இந்தப் படத்திற்கான இசை வெளியிட்டு விழா சென்னை வேளச்சேரியில் பீனிக்ஸ் மாலில் நடைபெற்றது.

இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த், அமீர்கான், மம்முட்டி, சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் வீடியோ மூலமாக பார்த்திபனுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

வித்யாசமான முறையில் விளம்பரப் படுத்திய பார்த்திபன்

அப்போது, பார்த்திபன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோவில் கூறுகையில், "என் அருமை நண்பர் பார்த்திபன் வித்தியாசமான படைப்பாளி. நல்ல மனிதர். புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர். இப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி. பாலிவுட்டில் 1960களில் சுனில் தத் இதே பாணியில் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெரும் வெற்றி பெற்றது. அதேபோல் தென்னிந்தியாவில் முதல் முயற்சியாக அமைந்துள்ள இப்படம் வெற்றியடைந்து ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும்" என தெரிவித்தார்.

Last Updated : May 19, 2019, 11:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details