தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 31, 2020, 12:26 PM IST

ETV Bharat / sitara

சிம்பு படத்தில் இணைந்த பிரியா பவானி சங்கர்!

சென்னை : சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார்.

பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரை சென்று பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் கைவசம் தற்போது ’இந்தியன் 2’, ’குருதி ஆட்டம்’, ’பொம்மை’, ’ஓமணப்பெண்ணே’ போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில் தற்போது புதிதாக பிரியா பவானி சங்கர் ‘பத்து தல’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரில் ஒருவருக்கு ஜோடியாகத் தான் பிரியா நடிப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த ’மப்டி’ படத்தின் ரீமேக்காக ’பத்து தல’ படம் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிடும் சாய் தன்ஷிகா பட ட்ரெய்லர்!

ABOUT THE AUTHOR

...view details