ஹைதராபாத்: கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 10 டிகிரி குளிரில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஒட்டுமொத்த திரையுலகமும் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளன. வெளிநாடுகளில் நடைபெற்றுவந்த படப்பிடிப்புகளும் ஆங்காங்கே ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. 10 டிகிரி குளிரில், சாரல் மழை பொழிந்தபோதிலும் படப்பிடிப்பு நிறுத்தப்படாமல் நடைபெற்றுள்ளது.
இது குறித்து படத்தின் இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் தனது ட்விட்டரில்,
கரோனா அச்சுறுத்தல், 10 டிகிரி குளிர், சாரல் மழை என இருந்தபோதும் எங்கள் குழுவினரின் கூட்டு முயற்சியைத் தடுக்க முடியவில்லை.
ஜார்ஜியா பகுதி படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதற்குப் பேருதவிபுரிந்த ஜார்ஜியா குழுவினருக்கு நன்றிகள். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுடன் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
பாகுபலி சீரிஸ் படங்களுக்குப் பிறகு சஹோ படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகத் தோன்றிய பிரபாஸ், தற்போது ரொமாண்டிக் படத்தில் நடித்துவருகிறார். இது பிரபாஸ் நடிக்கும் 20ஆவது படமாக இருப்பதால் பிரபாஸ்20 என்று அழைக்கப்பட்டுவருகிறது.
இந்தப் படத்தில் பிராபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்ட்டே நடிக்கிறார். பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இதுவரை பார்க்காத பாக்யஸ்ரீயை 'பிரபாஸ் 20' இல் பார்பீர்கள் - பாக்யஸ்ரீ