ஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஒபராய் நடிப்பில் தயாராகியுள்ள படம் பி.எம். பிரதமர் நரேந்திர மோடி. பிரமதர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலையொட்டி இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது என எதிர்க்கட்சியினரும் பல்வேறு சமூக ஆர்வலர்களுக்கும் வலியுறுத்தினர்.
தோ்தல் முடிவு வெளியான மறுநாள் வெளியாகும் பிரதமர் படம்!
மக்களவை தேர்தல் முடிவு வெளியான மறுநாள் (மே 24) பி.எம் நரேந்திர மோடி திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அந்தப் படத்துக்குத் தடை விதித்தது. இந்நிலையில் இப்படம் மே 24-ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் கூறியுள்ளதாவது, பெறுப்புள்ள குடிமகனாக இந்த நாட்டின் சட்டத்தை மதிக்கிறேன் . ஏராளமான விவதாங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே படம் திரைக்குவர உள்ளது. ஒரு படம் வெறும் நான்கு நாட்கள் மட்டுமே விளம்பரப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இப்போது படத்தை வெளியிடுவதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.