பிரபல பாடகர் யேசுதாஸின் மகனும் பின்னணிப் பாடகருமான விஜய் யேசுதாஸ் பாடல் பாடுவதுமட்டுமின்றி ஹீரோவாகவும் நடித்துவருகிறார். தனுஷின் 'மாரி' முதல் பாகத்தில் போலீசாக நடித்த விஜய் யேசுதாஸ் 'படைவீரன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் ஜேசுதாஸ் 'சால்மன்' என்ற 3டி படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஏழு மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழில் 'வர்தா' என்னும் பெயரில் வெளிவர உள்ளது.
விஜய் யேசுதாஸுடன் ஜொனிடா கதாநாயகியாக நடித்துள்ளார். ரொமான்டிக், சஸ்பென்ஸ் திரில்லர் படமான இதை ஷலீல் கல்லூர் இயக்கியுள்ளார். ஷஜு தாமஸ், ஜோஸ், ஜோய்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
சித் ஸ்ரீராம் பாடிய ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது. இப்பொழுது 'நீ போகும் வழி எங்கும் செண்பகப்பூவாய் நானிருப்பேன்' என்னும் இரண்டாவது லிரிக்கல் காணொலி விஜய் யேசுதாஸ் பிறந்த நாளான மார்ச் 23ஆம் தேதி வெளியாகி வைரலாகிவருகிறது.