தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 27, 2020, 4:38 PM IST

ETV Bharat / sitara

ஜனவரிக்கு தள்ளிப்போன ’பழகிய நாட்கள்’ ரிலீஸ்

புதுமுக நடிகர்களான மீரான், மேகனா, பாடகர் செந்தில் கணேஷ், சுஜாதா ஆகியோர் நடித்துள்ள ’பழகிய நாட்கள்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழகிய நாட்கள்
பழகிய நாட்கள்

ராம்தேவ் இயக்கத்தில் புதுமுக நடிகர்களான மீரான், மேகனா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ’பழகிய நாட்கள்’. இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிகிறது, பக்குவப்பட்ட காதல் வாழ்வியலை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்ற கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், வின்சென்ட்ராய், சுஜாதா, ஶ்ரீகாந்த், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த பாடகர் செந்தில் கணேஷ், நெல்லை சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பழகிய நாட்கள்

ராம்தேவ் பிக்சர்ஸ் சார்பில் ராம்குமார் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். மணிகண்டன், பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்ய, துர்காஷ் எடிட்டிங் பணியை செய்துள்ளார். ஜான், அலெக்ஸ், ஷேக் மீரா ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இத்திரைப்படம் இந்த மாதமே வெளியாகும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்பாராத காரணங்களால் படத்தின் வெளியீடு ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :2020-இல் உயிரிழந்த சினிமா பிரபலங்கள்!

ABOUT THE AUTHOR

...view details