தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முதல் முறையாக இளையராஜா இசையமைப்பில் விஷால்!

திரையுலகில் 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் விஷால், இளையராஜா இசையமைப்பில் முதல் முறையாக நடிக்கவுள்ளார்.

By

Published : Sep 10, 2019, 11:56 PM IST

நடிகர் விஷால்

சென்னை: துப்பறிவாளன் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது முறையாக அதன் இரண்டாம் பாகத்தில் விஷால் - மிஷ்கின் மீண்டும் இணைந்துள்ளனர்.

'துப்பறிவாளன் 2' என்ற பெயரில் உருவாகும் இரண்டாம் பாகத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

தற்போது 'சைக்கோ' என்ற படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். சைக்கலாஜிகல் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் உதய் நிதி ஸ்டாலின், அதீதி ராவ் ஹெய்தரி, நித்யா மேனன், இயக்குநர் ராம், ஷாஜி சென் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

முன்னதாக, 2004ஆம் ஆண்டு வெளிவந்த 'செல்லமே' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஷால். காந்தி கிருஷ்ணா இயக்கியிருந்த இந்தப் படம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியானது.

இந்த நிலையில், விஷால் திரைக்கு வந்த 15 ஆண்டுகள் ஆகியிருப்பதால் அந்த நாளில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் இளையராஜா இசையில் முதல் முறையாக நடிக்க இருப்பதால், இந்த சிறப்பான நாளில் 'துப்பறிவாளன் 2' குறித்து அதிகாராப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இளையராஜாவைச் சந்தித்த இயக்குநர் மிஷ்கின், விஷால், அவரது தந்தை ஜிகே ரெட்டி

இயக்குநர் மிஷ்கின், விஷால் மற்றும் அவரது தந்தை ஜிகே ரெட்டி உள்ளிட்டோர் இளையராஜாவை நேரில் சந்தித்தப் பின்னர் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இளையராஜாவைச் சந்தித்த இயக்குநர் மிஷ்கின், விஷால், அவரது தந்தை ஜிகே ரெட்டி

'துப்பறிவாளன்' படத்தில் பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, வினய், பாக்யராஜ், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரவிமாரியா, 'ஆடுகளம்' நரேன், 'தலைவாசல்' விஜய், அஜய் ரத்னம் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து 'துப்பறிவாளன் 2' மீது தற்போது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details