தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இரண்டாவது இடத்தில் நோலனின் 'டங்கிர்க்'

காற்று, நிலம், கடல் என மூன்று கோணங்களில் அமைந்திருக்கும் கிறிஸ்டோபர் நோலனின் டங்கிர்க் படத்தில் பிரமாண்டத்தைக் காட்டிலும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இருக்கின்றன என ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ கூறியுள்ளார்.

By

Published : Jan 4, 2020, 10:27 AM IST

Dunkirk in Tarantino best film of decade
Director Quentin Tarantino

லாஸ் ஏஞ்சல்ஸ்: கிறிஸ்டோபர் நோலனின் டங்கிர்க் படம், கடந்த தசாப்தத்தில் தனது சிறந்த படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ தெரிவித்துள்ளார்.

தி ரிங்கர்ஸ் ரீவாட்சபிள் என்ற வலையொலி (podcast) தொடரில் பேசியபோது இயக்குநர் டாரன்டினோ கூறியதாவது, "2010-2019ஆம் ஆண்டுகள் வரையிலான தசாப்தத்தில் வெளியான சிறந்த படங்களை தொகுத்துவருகிறேன். அதில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் இரண்டாம் உலகப்போர் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, காற்று, நிலம், கடல் என மூன்று கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டு வெளியாகியிருந்த டங்கிர்க் இரண்டாவது இடத்தில் உள்ளது.

முதலில் இந்தப் படம் 7ஆவது இடத்தில்தான் இருந்தது. அதன் பின்னர் இரண்டு முறைக்கு மேல் பார்த்த பின்னர் இரண்டாவது இடத்துக்கு மாறியுள்ளது. முதலில் இந்தப் படத்தின் பிரமாண்ட்டத்தால் கவரப்பட்டு, பின்னர் உணர்வுப்பூர்வமான அனுபவத்தை ஏற்படுத்தியது.

டங்கிர்கை முதல் இரண்டு முறை பார்த்தபோது வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. முதல் இரண்டு தடவை எனக்கு படத்தின் பிரமாண்டத்தைத் தவிர வேறெதுவும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் அதுவே என்னைப் பிரமிக்க வைத்து மீண்டும் பார்க்க தூண்டியது. மூன்றாவது முறையிலிருந்து பிரமாண்டத்தைக் காட்டிலும், படத்திலிருக்கும் கதாபாத்திரங்களும் கதைகளும் கவனத்தை ஈர்த்தன. அப்போது பல பிரமிப்பையும் தாண்டி சில விஷயங்கள் தென்பட்டன" என்றார்.

இருப்பினும், இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ தற்போது வரை தனது முழு பட்டியலை வெளியடவில்லை. 2018ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதில் 8 பிரிவுகளில் விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்ட டங்கிர்க், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த படத்தொகுப்பு ஆகிய மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details