தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெளியானது "நவரசா" ட்ரைலர்!

மணிரத்னம் இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நவரசா ஆந்தாலஜி படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

By

Published : Jul 27, 2021, 10:17 AM IST

நவரசா
நவரசா

மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும், இந்த வருடத்தில் ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் "நவரசா" ஆந்தாலஜி படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில், ஒன்பது முன்னணி இயக்குநர்கள், ஒன்பது முன்னணி ஒளிப்பதிவாளர்கள், ஒன்பது முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து நவரசங்களை வைத்து 'நவரசா' என்னும் படத்தை இயக்கியுள்ளனர். படம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தை பிரியதர்ஷன், வசந்த் சாய், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், ரதிந்தீரன் ஆர் பிரசாத், சர்ஜூன் ஆகிய ஒன்பது இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.
கோபம், சிரிப்பு, வெறுப்பு உள்ளிட்ட ஒன்பது ரசங்களை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள ஒன்பது குறும்படங்களில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், யோகிபாபு, நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் ட்ரைலர் இன்று (ஜூலை27) வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நவரசா டீசரின் மேக்கிங் வீடியோ வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details