தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 16, 2021, 11:40 AM IST

ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியாகும் பரத்தின் நடுவன்

நடிகர் பரத் நடிப்பில் உருவாகியுள்ள நடுவன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடுவன்
நடுவன்

நடிகர் பரத் நடிப்பில் சரண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், நடுவன். புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக பைரவா படத்தில் நடித்த அபர்ணா வினோத் நடித்துள்ளார்.

மனதார நேசிக்கும் நபர் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அறியும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்தச் சூழ்நிலையை எவ்வாறு கையாள்வீர்கள்? என்பதே படத்தின் கதையாகும்.

இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

இந்நிலையில் நடுவன் திரைப்படம் நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details