தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 14, 2020, 10:11 PM IST

ETV Bharat / sitara

பூஜையுடன் தொடங்கியது மிஷ்கினின் ‘பிசாசு 2’

இயக்குநர் மிஷ்கினின் புதிய திரைப்படமான “பிசாசு 2” பூஜையுடன் இன்று (டிசம்பர் 14) தொடங்கியது.

Mishkin's Devil 2
Mishkin's Devil 2

தயாரிப்பாளர் முருகானந்தமின் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ‘சைக்கோ’ வெற்றிக்கு பிறகு மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ‘பிசாசு 2’ பட வேலைகள் பூஜையுடன் இன்று தொடங்கியதை அடுத்து, இப்படத்துக்காக பிரமாண்டமான செட் வேலைகள் திண்டுகல்லில் தொடங்கியது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Mishkin's Devil 2

இந்த படத்தின் இசையமைப்பாளராக கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், சவரக்கத்தி பட புகழ் பூர்ணாவும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details