தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

10 ஆண்டு வாழ்க்கையை 10 நிமிட காணொலியாக வெளியிட்ட மைலி சைரஸ்

நிச்சயதார்த்தம், திருமணம், பிரிவு, உணர்ச்சிமிக்க பேச்சு என 10 நிமிடங்களில் தனது பத்து ஆண்டுகால வாழ்க்கையை காணொலியாக வெளியிட்டுள்ளார் பாடகி மைலி சைரஸ்.

Miley Cyrus songs
Miley Cyrus shares end-of-decade video

By

Published : Jan 3, 2020, 9:02 AM IST

வாஷிங்டன்: முன்னாள் கணவர் லியம் ஹெம்ஸ்வொர்த் புகைப்படங்களோடு தனது தசாப்தத்தின் காணொலியை வெளியிட்டுள்ளார் அமெரிக்க பாடகி மைலி சைரஸ்.

கடந்த பத்து ஆண்டுகளில் தனது வாழ்க்கையில் நடந்த முக்கிய சிறப்பு அம்சங்களை மான்டாஜ் காணொலியாகத் தொகுத்துள்ளார் பாடகி மைலி சைரஸ். இதில், அவரது திருமண நிச்சயதார்த்தம், மணமுறிவு, சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் புகைப்படங்கள், காணொலிகள் ஆகியவற்றை இணைத்துள்ளார்.

சுமார் 10 நிமிடம் ஓடக்கூடிய இந்தக் காணொலி, பிரபல பாடகி மாடோனாவுடன் மைலி சைரஸ் இணைந்து நிகழ்த்திய பாடல் கச்சேரி, உணர்ச்சிகரமான பேச்சுகள் ஆகியவற்றுடன் இறுதியாக முன்னாள் கணவர் ஹெம்ஸ்வொர்த்தை பிரிந்த நிகழ்வோடு முடிகிறது.

இந்தக் காணொலியில், தான் சிக்கிய சர்ச்சை காணொலிகள், புகைப்படங்கள் சிலவற்றையும் இணைத்துள்ளார் மைலி சைரஸ்.

'எனது 10 ஆண்டுகள் 10 நிமிடங்களில்' எனப் பதிவிட்டு #NewYearStartsNow என்ற ஹேஷ்டேக்குடன் காணொலியை வெளியிட்டுள்ளார்.

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தை தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய ஆஸ்திரேலியா இசைக்கலைஞர் காடி சிம்சன் குறித்து இந்தக் காணொலியில் மைலி சைரஸ் குறிப்பிடவில்லை.

வேறொரு பெண்ணுடன் முத்தம் கொடுத்தவாறு அவரது புகைப்படங்கள் வெளியானதால், தனது கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வை காணொலியில் இணைக்காமல் விட்டுவிட்டார் மைலி சைரஸ் என்று விவரம் அறிந்தவர்கள் கிசுகிசுக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details