தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யூ-டியூப்பில் ஐந்து கோடி பார்வையாளர்களைக் கடந்த மாஸ்டர் பட டீஸர்!

சென்னை: மாஸ்டர் படத்தின் டீஸர் யூ-டியூப் தளத்தில் ஐந்து கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

By

Published : Dec 26, 2020, 2:27 PM IST

மாஸ்டர்
மாஸ்டர்

'மாநகரம்', 'கைதி' ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் தீபாவளி பண்டிகையன்று படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் தற்போது வரை மாஸ்டர் படத்தின் டீஸர் யூ-டியூப் தளத்தில் 5 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக, இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போன நிலையில், அடுத்தாண்டு(2021) பொங்கல் பண்டிகைக்கு இத்திரைப்படம் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details