லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர்' படம் பொங்கலை ஒட்டி நேற்று (ஜன. 14) உலகம் முழுவதும் வெளியானது. கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பத்து மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. தளர்வுக்குப் பிறகு பல மாதங்கள் கழித்து வெளியாகியிருக்கும் பெரிய நடிகர் படம் என்பதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
நேற்று வெளியான திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை முன்னிட்டு திரையிட்ட இடமெல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இப்படத்தின் உள்நாட்டு வசூல் மட்டும் ஒரே நாளில் ரூ. 40 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.