பிரபலமலையாள நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் 'அசுரன்' திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது 'கயட்டம்', 'ப்ரதி கூவன்கோழி', 'மரக்கர் அரபிக்கடலின்டே சிம்மம்' போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
சமீபத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், தமிழ் படங்களில் நடிக்க, தான் முன்பே திட்டமிட்டிருந்ததாகவும், எந்த திரைப்படங்களும் சரியாக ஒத்துவராததால் தமிழில் நடிக்க முடியவில்லை என்று கூறினார்.