தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மாமாங்கம்' மம்மூட்டியைப் பார்ப்பதற்காக திருமணத்தை மாற்றி வைத்த ரசிகர்!

'மாமாங்கம்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக மம்மூட்டியின் ரசிகர் ஒருவர் தனது திருமணத் தேதியை மாற்றி வைத்துள்ளார்.

mamangam

By

Published : Nov 9, 2019, 6:24 PM IST

பத்மகுமார் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து உருவாகி, வரும் வராலாற்றுத் திரைப்படம் 'மாமாங்கம்'. இதில் பிரஜி தேசாய், மாளவிகா மேனன், உன்னி முகந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை காவ்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கேரளாவிலுள்ள மலபார் பகுதியில் கொண்டாடப்படும் 'மாமாங்கம்' என்ற திருவிழாவை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 18ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பதுபோன்று எடுக்கப்பட்ட இப்படம், வரும் நவம்பர் 21ஆம் தேதி மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இதனையடுத்து, எர்ணாகுளம் மாவட்டம் நார்த் பரவூர் பகுதியைச் சேர்ந்தவர் மேமன் சுரேஷ். 'மாமங்கம்' ரிலீஸ் நாளில் மேமன் சுரேஷூக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. இவர் தீவிரமான மம்மூட்டியின் ரசிகர் ஆவர். இதனால் அவர் 'மாமாங்கம்' படத்தின் முதல் காட்சியைப் பார்க்க முடியாது என்பதால், தனது திருமண தேதியை அக்டோபர் 30ஆம் தேதி மாற்றியுள்ளார். இவரின் இந்த முடிவு அப்பகுதியில் பெரும் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது திருமணமான மேமன் தனது மனைவியுடன் நவம்பர் 21ஆம் தேதி வெளியாகும் 'மாமாங்கம்' படத்தின் முதல் காட்சியைப் பார்க்க ஆர்வமுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details