நடிகர் விஜய் இன்று (ஜூன்.22) தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு ரசிகர்கள், தமிழ் திரைத்துறையினர், மலையாள திரைத்துறையினர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாஸ்டராக மாறி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகை
மாஸ்டர் படத்தில் விஜய்யின் கதாபாத்திரமான ஜேடி மாஸ்டராக மாறி மாளவிகா மோகனன் விஜய் பிறந்தநாளுக்கு ஸ்டைலாக வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனன், அப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரமான ஜேடி மாஸ்டர் போன்று ப்ளூ கலர் சட்டை, கறுப்பு கலர் ஜீன்ஸ், கூலிங் கிளாஸ், சிக்லெட் என விஜய் பயன்படுத்திய ப்ராப்பர்ட்டியை மாளவிகா மோகனும் பயன்படுத்தி ஸ்டைலாக மாறி, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: திரையில் 'மாஸ்டர்' - சமூகவலைதள கொண்டாட்டத்தில் 'தளபதி' ரசிகர்கள்!