தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாதவனின் 'மாறா' மூன்றாவது சிங்கிள் ட்ராக் வெளியீடு!

சென்னை: மாதவன் நடிப்பில் உருவாகிவரும் 'மாறா' படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகிறது.

By

Published : Dec 7, 2020, 6:24 PM IST

maara
maara

மாதவன் தற்போது 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் மாதவன் 'மாறா' என்ற படத்திலும் நடித்துவருகிறார். மலையாளத்தில் துல்கர் சல்மான்-பார்வதி நடிப்பில் வெளியான 'சார்லி' திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்குகிறார். 'விக்ரம் வேதா' படத்தைத் தொடர்ந்து 'மாறா' படத்தில் மாதவனுடன் இரண்டாவது முறையாக இப்படத்திலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்துள்ளார்.

அலெக்சாண்டர் பாபு, மினன் ஜான் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரமோத் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தீபக் பகவான் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை அமேசான் ப்ரைமில் டிசம்பர் 17ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.

மாறா மூன்றாவது சிங்கிள் ட்ராக் போஸ்டர்

காதலை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் தாமரையின் வரிகளில் 'யார் அழைப்பது', 'ஓர் அறை உனது' ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே 'ஓ அழகே' என்ற மூன்றாவது பாடல் நாளை (டிசம்பர் 8) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details