தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 14, 2020, 3:34 PM IST

Updated : Aug 14, 2020, 3:47 PM IST

ETV Bharat / sitara

'லாக்கப்' - ஓடிடி தளத்தில் வெளியான மற்றொரு திரைப்படம்!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘லாக்கப்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Vaibhav
Vaibhav

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமலில் இருக்கும் ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால் தயாரிப்பாளர்கள் சிலர், தங்களது படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஆக.14) வைபவ் நடித்துள்ள 'லாக்கப்' திரைப்படம் ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் சார்லஸ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை, நிதின் சத்யா தயாரித்துள்ளார். வாணி போஜன், பூர்ணா, ஈஸ்வரி, வெங்கட் பிரபு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லராக வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இப்படம் தவிர வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டேரி' திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஜோதிகா நடிப்பில் 'பொன்மகள் வந்தாள்' படமும், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெண்குயின் படமும் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Aug 14, 2020, 3:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details