தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 24, 2020, 7:21 PM IST

ETV Bharat / sitara

'லாக்கப்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள லாக்கப் திரைப்படம் ரிலீஸாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Lockup
Lockup

கரோனா வைரஸ் காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கால் மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனால் கோடை விடுமுறைக்கு வெளியாக வேண்டிய திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில் நடிகர் வைபவ் நடிப்பில், அறிமுக இயக்குநர் சார்லஸ் இயக்கியுள்ள 'லாக்கப்' திரைப்படம் ZEE 5 தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து தற்போது இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. நிதின் சத்யா தயாரித்துள்ள இப்படத்தில் வாணி போஜன், பூர்ணா, ஈஸ்வரி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details