தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 1, 2021, 2:30 PM IST

ETV Bharat / sitara

கோடியில் ஒருவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'கோடியில் ஒருவன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோடியில் ஒருவன்
கோடியில் ஒருவன்

தமிழ் சினிமாவில் 'ஆள்', 'மெட்ரோ' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆனந்த் கிருஷ்ணன். இவர் தற்போது விஜய் ஆண்டனியை வைத்து 'கோடியில் ஒருவன்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்க படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ராஜா, தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

அரசியலை மையப்படுத்தி, த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படம் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதviர விஜய் அண்டனி 'பிச்சைக்காரன் 2' படத்தை நடித்து, இயக்கி, தயாரித்து, இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கைவசம், 'தமிழரசன்', 'அக்னி சிறகுகள்', 'காக்கி' ஆகிய திரைப்படங்கள் உள்ளன.

இதையும் படிங்க:ஒரு வாரம் ஓய்வு: விறுவிறுப்பாகக் களத்தில் இறங்கிய பீஸ்ட் படப்பிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details