சென்னை: கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.
இந்நிலையில், ராஜ்குமாரின் மகள் வழி பேத்தியான தன்யா ராம்குமார் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே கன்னட திரையுலகில் சில படங்களில் நடித்துள்ளார்.