தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கானா பாடலுடன் களமிறங்கிய 'காஞ்சனா 3'

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'காஞ்சனா 3' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

By

Published : Mar 23, 2019, 11:06 AM IST

லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் மாபெரும் வெற்றிபெற்ற படம் 'முனி'. அதனைத் தொடர்ந்து 'காஞ்சனா' படத்தினை இயக்கினார். அப்படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டு வெளியானது. அனைத்து பாகங்களிலும் படத்தின் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்திருந்தார்.

லாரன்ஸ் நடித்து வெளியான முனி படத்தின் 3 பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'காஞ்சனா 3' (முனி 4) திரைப்படம் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக ஓவியா நடித்துள்ளார். மேலும், கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தினை ராகவேந்திரா புரொடக்ஷன் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை அதிரடியாக வெளியிட்டுள்ளது படக்குழு. "வா நண்பனுக்கு கோவில கட்டு" எனும் கானா பாடல் அதிரிபுதிரியாக களம் இறங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details