தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஊர் திருவிழாவில் மக்களை மகிழ்வித்த வடிவேலு!

சிவகங்கை: கலியாந்தூர் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கலந்து கொண்டு குத்தாட்டம் போட்டதை கிராம மக்கள் வெகுவாக ரசித்தனர்.

வடிவேலு

By

Published : Jul 4, 2019, 10:37 PM IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கலியாந்தூர் கிராமத்தில் அய்யனார் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த காலத்தில் புரவி எடுப்புத் திருவிழா நடத்தினால் மழை பெய்யும் என்பது ஐதீகம். மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்த திருவிழாவில் நகைச்சுவை புயல் வடிவேலு கலந்து கொண்டார். வடிவேலுவின் மனைவி சொந்த ஊர் கலியாந்தூர் என்பதால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்று இரவு நடைபெற்ற வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார்.

பாட்டு பாடி அசத்திய வடிவேலு

அப்போது, நடிகர் வடிவேலு, 'எட்டணா இருந்தா என்பாட்டை கேட்கும்' என்ற பாடலை பாடி அசத்தினார். நடித்தும் காட்டினார். பின்னர் அவர் பேசுகையில், "அய்யனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும். குடிநீர் பிரச்னை எல்லா இடங்களிலும் உள்ளது. அதனை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும். கிராமத்தின் பாரம்பரியமும், பண்பாடும் திருவிழாக்களில் தான் உள்ளது. அதில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். கலியாந்தூர் சுற்றுவட்டார கிராமங்களின் மருமகன் நான்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details