தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அப்போ 'சூரரைப் போற்று', இப்போ 'ஜெய் பீம்' - ஐஎம்டிபியில் தொடர் சாதனை படைக்கும் சூர்யா

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் ஐஎம்டிபி தளத்தில் முதல் இடத்தைப் பிடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

Jai Bhim
Jai Bhim

By

Published : Nov 13, 2021, 4:49 PM IST

ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய் பீம்'. இதில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியானது.

இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், கமல் ஹாசன், இயக்குநர் பா. இரஞ்சித், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது குறித்தும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் ஜெய் பீம் திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைப் பார்த்த கேரள சுகாதாரத் துறைமுன்னாள்அமைச்சர் ஷைலஜா டீச்சர் தனது ட்விட்டரில், "ஜெய் பீம் திரைப்படம் மாற்றத்திற்கான ஒரு உத்வேகம். சமூகத்தின் அதிகார வன்முறை, சமூக ஒடுக்குமுறையின் நம்பகமான சித்திரிப்பு, அற்புதமான நடிப்பு, ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கு என் பாராட்டுகள்" எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவந்த இப்படம் தற்போது ஐஎம்டிபி என்னும் இணையத்தில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இந்த இணையத்தில் ஹாலிவுட் உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழி திரைப்படங்களின் விமர்சனங்கள், செய்திகள் உள்ளிட்டவை இடம்பெறும். இது உலக அளவில் திரை விமர்சகர்கள், ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இணையதளம் ஆகும்.

ஐஎம்டிபி இணையத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற படமாக ஃபிராங்க் டராபோன்ட் இயக்கிய 'தி ஷஷாங் ரிடம்ஷன்' திரைப்படம் இடம்பெற்றிருந்தது.

தற்போது ஜெய் பீம் திரைப்படம் 9.6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 'தி ஷஷாங் ரிடம்ஷன்', மூன்றாம் இடத்தில் காட் ஃபாதர் (1972) இடம் பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு பத்து மதிப்பெண் அளவில் வாடிக்கையாளர்கள் வழங்கும் மதிப்பெண் அடிப்படையில், இந்த ஐஎம்டிபி (IMDb) இணையத்தில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுவருவதால் வருங்காலங்களில் இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

முன்னதாக சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஐம்டிபி இணையதளத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐஎம்டிபியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த சூர்யாவின் 'சூரரைப் போற்று'

ABOUT THE AUTHOR

...view details