தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாதுகாப்பாக இருங்கள், நல்ல எதிர்காலம் உள்ளது - கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜாக்கி சான்

வெளியே செல்லும் நிலை ஏற்பட்டால் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். அது உங்களைச் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் என்று ஜாக்கி சான் பதிவிட்ட வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

கரோனா விழிப்புணர்வு  ஏற்படுத்திய ஜாக்கி சான்
கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜாக்கி சான்

By

Published : Apr 4, 2020, 7:36 PM IST

கரோனா வைரஸ் தொற்று குறித்து நடிகர் ஜாக்கி சான் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உலகப்பெருந்தொற்றான கரோனாவுக்கு இதுவரை உலகம் முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கிவருகிறது. இதனையடுத்து ஹாலிவுட் பிரபலமான ஜாக்கி சான், தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,"கரோனா வைரஸ் மிகவும் அபாயகரமானது. எனவே, அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். அரசு கூறும் அறிவுரைகளை தயவு செய்து கவனமுடன் கடைப்பிடியுங்கள். வெளியே செல்லும் நிலை ஏற்பட்டால் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்.

அது உங்களைச் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும். அனைவரும் பாதுகாப்பாகப் பத்திரமாக இருங்கள். அணைவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது என்று கூறினார். ஜாக்கி சானின், இந்த வீடியோ நெட்டிசன்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:’கரோனா, கொரில்லா யுத்தம் செய்கிறது’-கவிப்பேரரசு வைரமுத்து

ABOUT THE AUTHOR

...view details