சென்னை: நயன்தாரா நடித்து வரவேற்பை பெற்ற கோலமாவு ’கோகிலா’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமாக அறியப்படுபவர் இயக்குநர் நெல்சன். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகவுள்ள படம் ’டாக்டர்’. இப்படத்தின் படப்பிடிப்பு முன்னரே நிறைவுற்ற நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி எப்போது அறிவிக்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் வருகிற 26ஆம் தேதி இப்படம் வெளியிடப்படவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்து போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
’டாக்டர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு; ரசிகர்கள் கொண்டாட்டம் - வெளியானது சிவகார்த்திகேயன் பட அறிவிப்பு
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள ’டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தெலுங்கில் நானியுடன் நடித்து புகழ் பெற்ற பிரியங்கா மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, வினய் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வெற்றி பெற்றுள்ளன. கேஜேஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதற்கு இன்னும் பல நாட்கள் இருப்பினும், சமூக வலைதலங்களில் இப்போதே ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கொண்டாட தொடங்கி விட்டனர்.
இதையும் படிங்க:புகார் அளிக்காமலிருக்க பெண் எஸ்பியின் காலில் விழுவதாக கூறிய டிஜிபி