உலக சுகதாரா அமைப்பு (WHO) கொரோனா வைரஸை உலகளாவிய பெருந்தொற்றாக அறிவித்துள்ளது. இதனையடுத்து ஹாலிவுட்டின் பலபடங்களின் படப்பிடிப்பும், படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள டிஸ்னி கேளிக்கை லேண்ட் மார்ச் 14 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருந்தினர்கள், எங்கள் ஊழியர்களின் நலனும் பாதுகாப்பும் கருத்தில் கொண்டு புளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி, வேர்ல்ட் ரிசார்ட், டிஸ்னி வேலண்ட் பாரிஸ், பாரிஸ் ரிசார்ட்டில் உள்ள தீம் பார்க், டிஸ்னி குரூஸ் உள்ளிட்டவைகளை தற்காலிகமாக மூடுப்படுகிறது.
கலிபோர்னியாவில் இதுவரை கொரோனா பரவவில்லை என்றாலும் டிஸ்னி தாமாக முன்வந்து இந்த முடிவை எடுத்துள்ளது. நாங்கள் தொடர்ந்து நிலமையை கண்காணித்துக்கொண்டிருப்போம். சுகாதார அமைப்பு, சுகாதாரத்துறையினருடன் சேர்ந்து நிலமையை கட்டுக்குள் கொண்டுவர துணை நிற்போம். மார்ச் 14 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை விருந்தினர்கள் முன்பதிவு செய்த தொகையை அவர்களுக்கு திருப்பி செலுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக ஏற்கனவே ஷாங்காய், ஹாங்காங்கில் உள்ள டிஸ்னி வேல்ர்ட்டை மூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க: டிஸ்னிக்கு ரூ.120 கோடி மானியம் வழங்கும் ஆஸ்திரேலிய அரசு