தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரிலீசுக்கு முன்பு சர்வதேச விருது பெற்ற 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'

பின்னணி இசை, பாடல்கள் இல்லாமல் வெறும் லைவ் சப்தங்களை வைத்து தனது குருநாதரும், மறைந்த இயக்குநருமான பாலசந்தருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இயக்குநர் வஸந்த் உருவாக்கியுள்ள 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்தில் நடிகை பார்வதி

By

Published : Sep 19, 2019, 1:28 PM IST

சென்னை: ஐப்பானில் புகழ் பெற்ற ஃபூக்குவோகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம், சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தப் படத்தின் பணிகளை தொடங்கினார் இயக்குநர் வஸந்த். தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கிய படத்தில், கதையின் நாயகிகளாக மலையாள நடிகை பார்வதி, லட்சுமிபிரியா சந்திமெளலி, காளிஸ்வரி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

ஃபூக்குவோகா சர்வதேச திரைப்பட விழாவில் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்துக்காக விருது பெற்ற இயக்குநர் வஸந்த்

பிரபல எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் படத்தின் கதையை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு - ஏகாம்பரம், ரவி ராய். படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்.

பாடல்கள், பின்னணி இசை இல்லாமல் வெறும் லைவ் சப்தங்களை வைத்தே உருவாக்கியுள்ளனர். இதனால் படத்துக்கு இசையமைப்பாளர் கிடையாது. ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி சவுண்ட் டிசைன் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஜப்பானில் புகழ்பெற்ற ஃபூக்குவோகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம், சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்தப் படம் சில காரணங்களால் ரிலீசாகாமல் உள்ளது. இதனிடையே பல்வேறு திரைப்பட விழாக்களில் படம் திரையிடப்பட்டு கெளரவிக்கப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details