தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கைதி' வின்னர் சிக்கன் டின்னர் - 'ஆடை' ரத்தனகுமார்!

'கைதி' படத்தைப் பார்த்த ஆடை பட இயக்குநர் ரத்தனகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

By

Published : Oct 28, 2019, 10:39 AM IST

kaithi

நடிகர் கார்த்தி-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தீபாவளி விருந்தாக வெளியான படம் கைதி. மாநகரம் திரைப்படத்தைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

படம் பார்த்த அனைவருக்கும் 'கைதி டில்லி'யைப் பிடித்துப்போய்விட்டது. அந்த அளவுக்கு இப்படத்தில் கார்த்தி தனது நடிப்பால் மிரட்டியிருப்பது அவரை அடுத்த கட்டத்துக்குக் கூட்டிச்சென்றுள்ளது.

இந்தப் படத்தில் நரேன், ஜார்ஜ் மரியான், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் எனவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.

கைதி குறித்த ரத்தன குமார் ட்வீட்

இதனையடுத்து இப்படத்தைப் பார்த்த மேயாதமான், ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details